மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் வவுனியா, மன்னார் மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று வியாழக்கிழமை(18) மின்சாரம் தடைப்படவுள்ளதக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இன்று காலை-08 மணி முதல் மாலை-05.30 மணி வரை வவுனியா மாவட்டத்தின் சாந்தசோலை கிராமம், கொக்கிளிய, அக்போபுர, கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகா மயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரியகூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், அட்டம்பஸ்கட கிராமம், தவசிக்குளம் கிராமம், பண்டாரிக்குளம் கிராமம் ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-08.30 மணி முதல் மாலை- 05.30 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மன்னார் வைத்தியசாலை, மன்னார் நீர்ப்பாசனத் திணைக்களம், மன்னார் தொலைத் தொடர்பு நிலையம், உயிலங்குளத்திலிருந்து தலைமன்னார் வரை, வங்காலை கடற்படை முகாம், வங்காலை நீர்ப்பாசனத் திணைக்களம், அடம்பன் நீர்ப்பாசன சபை, கமலாம்பிகை அரிசி ஆலை, மாந்தை உப்பு உற்பத்தி நிலையம், கீரி ஐஸ் தொழிற்சாலை,ஆவேமரியா ஐஸ் தொழிற்சாலை, ரைமேக்ஸ் கார்மெண்ட், விசேட அதிரடிப்படை முகாம், எருக்கலம் பிட்டி பம் கவுஸ், பேசாலை, வங்காலைப்பாடு ஐஸ் தொழிற்சாலை, பேசாலை ஐஸ் தொழிற்சாலை, மீன்பிடி சமாசம், அந்தோனிப்பிள்ளை ஐஸ் தொழிற்சாலை, கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, தலைமன்னார் வைத்தியசாலை, தலைமன்னார் கடற்படை முகாம், சீனத் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment