//]]>

Tuesday, January 23, 2018

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூன்றாம் வருட மாணவர்கள் நால்வர் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் இரு மாணவர்களைத் தாக்கிய குற்றச்சாட்டில் யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் சி. சதீஸ்தரனின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட நான்காம், மூன்றாம் வருட சிங்கள மாணவர்களுக்கிடையே கடந்த வாரம் யாழ். பல்கலைக்கழகத்தில் மோதலொன்று இடம்பெற்றது. இதன் போது பல்கலைக்கழக நான்காம் வருட மாணவர்களை மூன்றாம் வருட மாணவர்கள் கடுமையாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டப்பட்டுக் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாகத் தாக்குதலை எதிர்நோக்கிய மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நான்கு மாணவர்களைப் பொலிஸார் கைது செய்தனர். கைதான மாணவர்கள் நால்வரும் நேற்றைய தினம்(22) யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment