யாழ். கோண்டாவில் இராசபாதை வீதியில் இன்று(18) அதிகாலை இரு பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இளம் தம்பதியினர் வசித்து வரும் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை உள்நுழைந்த கொள்ளையர்கள் இளம் குடும்பத் தலைவரையும், அவரது சகோதரரையும் தாக்கி விட்டுப் 15 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு அருகே வயோதிபத் தம்பதியர் வசித்து வரும் வீடொன்றுக்குள் உள்நுழைந்த கொள்ளையர்கள் அவர்களைத் தாக்கி விட்டுப் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுள்ளது.
அடுத்தடுத்து இரு வீடுகளில் கொள்ளைகளில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பல் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளது.
இந்நிலையில் மேற்படி இரு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment