யாழ். குடாநாட்டில் கடந்த இரு தினங்களாகக் கடும் குளிருடனான காலநிலை நிலவுகிறது. இன்றைய தினம்(18) குளிருடனான காலநிலை அதிகமாகக் காணப்படுகிறது.
கடந்த இரு தினங்களாகப் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இரவு மற்றும் காலை வேளைகளில் கடும் குளிருடனான காலநிலை நிலவுவதுடன், பகல் வேளையிலும் குளிருடனான தன்மையை உணர முடிகிறது.
கடும் குளிர் காரணமாக முதியவர்கள், நோயாளர்கள், குழந்தைகள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment