கிளிநொச்சி வட்டக்கச்சி பன்னங்கண்டி பாலத்தின் கீழிருந்து இளைஞரொருவர் இன்று செவ்வாய்க்கிழமை(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞரின் சடலத்திற்கருகில் மோட்டார்ச் சைக்கிளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி இளைஞர் மோட்டார்ச் சைக்கிளை அதிவேகத்தில் செலுத்தியமையினால் கட்டுப்பாட்டையிழந்து பாலத்தின் கீழ் விழுந்து உயிரிழந்திருக்கலாமெனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூரைச் சேர்ந்த இ. சர்வானந்தம்(வயது-22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment