அரசியல் ரீதியாக எவருக்கும் நன்மைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் தமிழ்மக்கள் பேரவைக்கில்லை. தமிழ்மக்கள் பேரவை எச்சந்தர்ப்பத்திலும் அரசியல் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்காது என வடமாகாண முதலமைச்சர் சி. வி.விக்னேஸ்வரன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை(16) பிற்பகல்-04 மணி முதல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கருத்தமர்வும் கலந்துரையாடலும் நிகழ்வு இடம்பெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
மேலும் இவ்வாறான கூட்டங்களைத் தடுத்து நிறுத்துவது மக்கள் அறிவூட்டுவதைத் தடுக்கும் ஒரு செயற்பாடே எனவும் அவர் கடுமையாகக் குற்றஞ் சாட்டியுள்ளார்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment