குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு சென்ற அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டிலிருந்த தாய் மற்றும் பெண் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டித் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துடன், கழுத்து மற்றும் தலையில் படுகாயமடைந்த நிலையில் தாயார் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கொலையாளியான ஈஸ்வர் நஞ்சை உட்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.
குறித்த சம்பவத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் யாழ். பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
('தமிழின் தோழன்')
0 comments:
Post a Comment