இம் மாதம் -14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கனடாவில் வசித்து வரும் ஈழத்தமிழ் இளைஞர்கள் மூவர் கனேடிய அணி சார்பில் போட்டியிடவுள்ளனர். இதன் மூலம் குறித்த இளைஞர்கள் மூவரும் ஈழத்தமிழினத்திற்குப் பெருமை சேர்க்கவுள்ளனர்.
காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான், ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர். இந்தப் போட்டியில் முதல் கட்டமாக கனடா அணியோடு இங்கிலாந்து, பங்காளதேசம், நமிபியா அணிகள் மோதவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும், சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவும், ஏரன் பத்மநாதன் சிறந்த விக்கெட் காப்பாளராகவும் செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment