அமெரிக்கா ஜி.எஸ்.பி சலுகையை ஒன்பது நாடுகளுக்கு வழங்கிவருகின்றன. இதில், இலங்கையும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்ச்சியாக வழங்கப்படும் ஒன்றல்ல. அமெரிக்காவினால் இடையிடையே மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமையாகும். எனினும், நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் ஜி.எஸ்.பி வரிச்சலுகை மீண்டும் இலங்கைக்குக் கிடைக்குமென எதிர்பார்ப்பதாக அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்றைய தினம்(03) கொழும்பில் இடம்பெற்ற போது அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான டாக்டர் ராஜித சேனாரத்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி வரிச் சலுகை நிறுத்தப்பட்டமைக்கும், ஜெருசலம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்த நிலைப்பாட்டுக்கும் எந்தவிதத் தொடர்புமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சலுகை ஆடைத்தொழிற்சாலைக்கு மாத்திரமே கிடைக்கப்பெற்றது. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 2.8பில்லியன் பெறுமதியான ஏற்றுமதிப்பொருட்களில் 128 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மாத்திரமே ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்கப்பெறுகின்றது. இது ஒரு சதவீத பங்காகும். இது எமக்கு பெரும் பாதிப்பு அல்ல எனவும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment