ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் யாழ். காரைநகர் சிவன் ஆலய பஞ்சரத பவனி புதுவருட தினமான இன்று திங்கட்கிழமை(01) சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ உமாகேஸ்வரன் தலைமையில் விசேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து தண்டிகை வாகனத்தில் நடராஐப் பெருமான், அம்பாள், விநாயகப் பெருமான், முருகப் பெருமான், வள்ளி,தெய்வானை, சண்டேஸ்வரர் ஆகிய தெய்வங்கள் உள்வீதி எழுந்தருளினர்.
அதனைத் தொடர்ந்து ஐந்து தெய்வங்களும் பஞ்சரதத்தில் ஆரோகணித்தனர். விசேட தீபாராதனைகளைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோஷத்துடன் பஞ்சரத பவனி ஆரம்பமாகியது.
பஞ்சரத பவனியில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும், வெளிமாவட்டங்களிலிருந்தும் பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
இதேவேளை, வருடம் தோறும் திருவெம்பாவை விரத காலப் பகுதியில் இவ்வாலயத்தில் இடம்பெறும் பஞ்சரத பவனி பிரசித்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment