வட-கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர்ப் பிரதமர் லீ சியான் லூங் இன்று புதன்கிழமை(24) காலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தச் சந்திப்புப் பயனுள்ளதாக அமைந்துள்ளதாகத் தெரிவித்த இரா. சம்பந்தன் இலங்கையில் குறிப்பாக வட, கிழக்கில் முதலீடுகளை ஊக்குவிக்குமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment