//]]>

Wednesday, January 24, 2018

சைவப்புலவர், இளஞ்சைவப்புலவர் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் நடாத்தப்படவுள்ள 2018 ஆம் ஆண்டுக்கான சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் ஆகிய பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்கான வழிகாட்டல் அறிமுக நிகழ்வு எதிர்வரும்-27 ஆம் திகதி சனிக்கிழமை யாழ். வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில்  காலை-09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த வழிகாட்டல் அறிமுக நிகழ்விற்குப் பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்துப் பரீட்சார்த்திகளையும்  தவறாது கலந்து கொள்ளுமாறு அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் செயலாளர் சைவப்புலவர் எஸ்.ரி.குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி பரீட்சைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான  பரீட்சை வழிகாட்டல் வகுப்புக்கள் பிரதி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை-09 மணி தொடக்கம் பிற்பகல்-01 மணி வரை வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

பரீட்சை வழிகாட்டல் வகுப்பில் இலக்கணம் சாத்திரம் , உரைநடை  , இலக்கியம்  , வரலாறு ஆகிய ஐந்து பாடங்களும் இளஞ்சைவப்புலவர் மற்றும் சைவப்புலவர் பரீட்சைக்குத்  தோற்றும் இரு தரப்பினருக்கும் இரு பிரிவாகத் தனித்தனியே வகுப்புகள் இடம்பெறவுள்ளது.

பரீட்சை எதிர்வரும் சித்திரை மாதம் மூன்றாவது வாரத்தில் இடம்பெறவுள்ளது. எனவே, பரீட்சைக்கான வழிகாட்டல் அறிமுக நிகழ்விலும், வழிகாட்டல் வகுப்புக்களிலும்  விண்ணப்பதாரிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment