தியத்தலாவ கஹகொல்ல பகுதியில் இன்று புதன்கிழமை(21) அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் வெடிப்புச் சம்பவத்தில் படையினர் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஏழு இராணுவ வீரர்கள், ஐந்து விமானப்படை வீரர்கள், ஏழு பொதுமக்கள் ஆகியோர் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஊவா – கஹகொல்ல நோக்கிச் சென்ற தனியார் பஸ்சொன்றில் இன்று அதிகாலை- 5.30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த வெடிப்பு சம்பவத்துக்குள்ளான பஸ் முழுமையாகத் தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது தியத்தலாவ மற்றும் பண்டாவரளை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவொரு பயங்கரவாதத் தாக்குதல் அல்லவெனவும், வெடிப்புச்சம்பவம் ஒன்றை அடுத்தே தீபரவியதாகவும் இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.
குறித்த வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மேற்படி சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment