யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து 90 வயது மூதாட்டியொருவர் நேற்றைய தினம்(27) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த மூதாட்டியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற திடீர் விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் உயிரிழந்த மூதாட்டியின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் இன்று புதன்கிழமை(28) சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேற்படி சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment