உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நாடு திரும்பவுள்ள இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவைக் கைது செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் கோத்தாபய ராஜபக்ஸ சிறைக்கு அனுப்பப்படுவார் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மகரவில் பகுதியில் நேற்று(31) நடைபெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை பொதுஜன முன்னணியின் அடுத்த அதிபர் தேர்தல் வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஸ கைது செய்யப்படும் அச்சத்தில் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். உக்ரேனிடம் மிக் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பான நீதி விசாரணைகளில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை அறிந்தே கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவுக்குத் தப்பியோடியுள்ளார்.அவர் எதிர்வரும்-10ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல்கள் முடிந்த பின்னர் 12 ஆம் திகதியளவில் மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.
மிக் போர் விமானக் கொள்வனவின் மூலம் கிடைத்த நிதி, ஹொங்கொங் வங்கிகளில் ஐந்து இந்தியர்களின் பெயர்களில் வைப்பிலிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அவரைக் கைது செய்வதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment