எதிர்வரும்- 10 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் நாளை மறுதினம்- 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்வியமைச்சு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பாடசாலைகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ளமையாலும், பெரும்பாலான பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளமையாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாடசாலைகள் மூடப்பட வேண்டும்.
மேலும், வாக்குப் பெட்டிகள் மற்றும் ஏனைய ஆவணங்களை விநியோகித்தல் மற்றும் பொறுப்ப்பேற்கும் பணிகளுக்காக 19 பாடசாலைகளும், இரண்டு கல்வியியல் கல்லூரிகளும் இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மூடப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment