//]]>

Tuesday, February 20, 2018

வடக்கில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகளிடையே கடும் போட்டி

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பூநகரி, ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில் ஆட்சியமைப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசியல் கட்சிகளும், சுயேட்சைக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் சிவில் சமூகத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இதற்கு ஆரம்பத்தில் சாதகமான கருத்துக்களை வெளிப்படுத்திய கட்சிகள் தற்போது முரண்பட ஆரம்பித்துள்ளன.

தொங்கு நிலையிலுள்ள சபைகளில் இரண்டில் தமிழ்க் காங்கிரசும், ஒன்றில் ஈ.பி.டி.பியும் ஏனையவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை வென்றுள்ளன.அதிக ஆசனங்களை வென்ற கட்சிகள் ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ள போதிலும் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டு கட்சிகள் போட்டியில் குதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment