ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை. அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று(19) பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதியிடம் பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான சட்டபூர்வத் தன்மை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியுள்ளமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதற்கு அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோர வேண்டும். நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதை அவர் மறந்து விடக் கூடாது.
பிரதமரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பாதுகாக்கிறாரா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு நிச்சயமாக... என மகிந்த ராஜபக் ஷ பதிலளித்ததுடன் வேறு யார் அவரை பாதுகாப்பது? எனவும் கேள்வி எழுப்பினார்.
0 comments:
Post a Comment