//]]>

Saturday, February 3, 2018

திடீரெனக் குறைக்கப்பட்ட ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்:காரணம் இதுதான்!


இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலை குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய பாஸ்மதி அரிசி- 120 ரூபா, வெள்ளைப் பச்சையரிசி- 60 ரூபா, உடைந்த அரிசி-59 ரூபா, பருப்பு-54 ரூபா 50 சதம், பயறு- 97 ரூபா 50 சதம்,துண்டு மிளகாய் -110 ரூபா, பெரிய வெங்காயம்- 55 ரூபா ஆகிய விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும்-07 ஆம் திகதி வரை இந்த விசேட விலைக்கழிவு அமுலிலிருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment