இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் , இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் நாளை ஞாயிற்றுக்கிழமை(04) காலை இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பிரித்தானியப் இளைவரசர் எட்வேர்ட் இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
எனினும், இலங்கையின் சுதந்திர தின விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேறு பிரதிநிதிகளோ பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளமையால் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாதுள்ளதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment