லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை நடவடிக்கைககளில் ஈடுபடுத்தப்படவிருந்த லெப்.கேணல் ஹேவகே என்ற இராணுவ உயரதிகாரியை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளது.
ஐ.நா அமைதிப்படையின் செயற்பாடுகளில் கலந்து கொள்வதற்காக லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த இலங்கை இராணுவத்தின் 150 பேர் கொண்ட அணிக்கு லெப்.கேணல் ரத்னபுலி வசந்தகுமார ஹேவகே என்ற அதிகாரி பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் கடந்த-2008,2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உள்நாட்டுப் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தவர்.
இவர் குறித்த மனித உரிமை ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர். இந்நிலையில் மேற்படி இராணுவ உயரதிகாரியை லெபனானில் ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐ.நா தடுத்து நிறுத்தியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment