யாழ். குடாநாட்டில் யாழ். மாநகர சபை, மூன்று நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் உள்ளிட்ட 17 சபைகளுக்குமான உள்ளுராட்சித் தேர்தல் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி முடிவுகளுக்கமைய யாழ்.குடாநாட்டின் மொத்த சபைகளிலும் 150 ஆசனங்களைக் கைப்பற்றித் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முன்னிலையிலுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவை 84 ஆசனங்களைக் கைப்பற்றி இரண்டாவது பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
இதேவேளை ஈ.பி.டி.பி 81 ஆசனங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தையும் தக்க வைத்துள்ளது.
(தமிழின் தோழன் -)
0 comments:
Post a Comment