//]]>

Thursday, February 1, 2018

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு ஏழுகோடி ரூபா பெறுமதி உபகரணங்கள்

யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில்  அனசீசியா பகுதி (உணர்வழித்தல் பகுதி), களஞ்சியம் என்பன இன்று வியாழக்கிழமை(01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் யோ.திவாகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்துகொண்டு குறித்த பிரிவுகளைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.   இதன் போது  சிவஞானசோதியால் ஏழு கோடி ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்களும் வைத்தியசாலைக்கென கையளிக்கப்ட்டுள்ளன.

இந்நிகழ்வில் யாழ்.மாவட்டச் செயலக மேலதிக அரச அதிபர் (காணி) முரளிதரன், தெல்லிப்பழை பிரதேச செயலர் சிவஸ்ரீ, வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், நோயாளர் நலன்புரிச் சங்க உறுப்பினர்கள், மற்றும் வைத்தியசாலைச் சமூகத்தினர்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.


(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment