உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற்றும் என அக் கட்சியின் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்றைய தினம்(02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சூழ்நிலையில் பெப்ரவரி-10 ஆம் திகதி தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பதிலாக புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும்.
ஐக்கியதேசியக் கட்சிக்குத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டால் இந்த நகர்வு சாத்தியமாகும். ஐக்கிய தேசியக் கட்சிக்குப் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கிடைத்தால் இந்த நோக்கம் சாத்தியப்படாது.
எனவே, வாக்காளர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும். அவ்வாறு வாக்களித்தால் தான் புதிய பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment