யாழ். கொக்குவில் குளப்பிட்டிப் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பொலிஸாருக்கும் எதிரான வழக்கு எதிர்வரும் மே மாதம்-07ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் சி.சதீஸ்தரன் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம்(20) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரச பகுப்பாய்வுத் திணைக்களத்தின் அறிக்கை கிடைக்கவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு அறிவித்தனர். இதனையடுத்து வழக்கை ஒத்திவைத்து நீதவான் உத்தரவிட்டார்.
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகிய இருவரும் கொக்குவில் குளப்பிட்டிப் பகுதி வழியாகக் கடந்த- 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் -20ஆம் திகதி நள்ளிரவு வேளை மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment