ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது எனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
கூட்டு அரசாங்கத்துக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதையடுத்து ஐக்கியதேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கப் போவதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவளிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அதனை மறுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணியை அமைப்பது குறித்து யாரும் பேச்சு நடத்த எம்மை அணுகவில்லை.அவ்வாறு யாரும் அணுகினால் அது தொடர்பில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
உள்ளூராட்சித் தேர்தலில் தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான தெளிவான செய்தியொன்றை மக்கள் வழங்கியுள்ளனர். மக்களின் அந்த ஆணையை நாங்கள் மதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment