மேற்படி போட்டி நேற்று வியாழக்கிழமை(15) பிற்பகல் -01 மணி முதல் கிளிநொச்சி மருதநகர் உதயதாரகை விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது.
குறித்த இறுதியாட்டம் நீர்ப்பாசனத் திணைக்கள கிரிக்கெட் கழகத்தின் தலைவரும், கிளிநொச்சிப் பிராந்திய பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளருமான எந்திரி ந.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அ.அற்புதராஜா சிறப்பு விருந்தினராகவும், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி வி.பிறேமகுமார், மாவட்டத்தின் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கண்டாவளைப் பிரதேச அணி நீர்பாசன திணைக்கள அணியைத் துடுப்பாடப் பணித்தது. முதலில் மட்டை வீசிய நீர்ப்பாசனத் திணைக்கள அணி ஒரு கட்டத்தில் ஏழு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை 35 ஓட்டங்களை பெற்று தடுமாறிய நிலையில் நீர்ப்பாசன திணைகள அணியை தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் சரிவிலிருந்து மீட்டார் திருநீபன்.
இறுதியில் பத்து ஓவர் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 68 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்டாவளைப் பிரதேச அணி இடையிடையே விக்கெட்டுகளைப் பறிகொடுத்த போதிலும் இறுதி வரை போட்டியின் வெற்றி மாறி மாறிக் காணப்பட்டது. இறுதி ஓவரில் எட்டு ஓட்டங்கள் மட்டும் பெறவேண்டிய நிலையில் பந்து வீசிய துசியந்தன் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து நீர்பாசன திணைக்கள அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதேவேளை, அதே தினம் நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் கிளிநொச்சி கட்டடங்கள் திணைக்களமும், கிளிநொச்சிக் கல்வி திணைக்களமும் மோதிக் கொண்டன. இதில் மூன்றாமிடத்தினைக் கல்வி திணைக்களம் வெற்றி கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment