கூட்டு அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை எதிர்வரும் -20ஆம் திகதி மாற்றப்படவுள்ளதாக இலங்கையின் உயர்கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஆதரவுடன் இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறும்.
இதனிடையே, தனித்து ஆட்சியமைப்பதற்கான புதிய அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த தலைவர்களான மலிக் சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க, கபீர் காசிம் ஆகியோர் ஈடுபட்டுள்ளதாக மற்றுமொரு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment