//]]>

Thursday, February 8, 2018

முடிவுக்கு வந்தது தேர்தல் பரப்புரைகள்



இலங்கையில் நாளை மறுதினம் சனிக்கிழமை(10) இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பரப்புரைகள் நேற்றுப் புதன்கிழமை(07) நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அனைத்து வகையான தேர்தல் பரப்புரைகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு-09  மணிக்குப் பின் வீடு வீடாகச் சென்று பரப்புரைகள் மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இடம்பெறும் தேர்தலுக்கு முன்னர் இடைப்பட்ட காலத்தில் வாக்குகளைக் கோரி எந்த விதமான பரப்புரைகளையும் மேற்கொள்ள முடியாது.

வேட்பாளர்கள் தமது வீடுகள், பணியகங்களில் கூட பதாதைகளைக் காட்சிப்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தமது வாகனங்களில் மாத்திரம் கொடிகளைப்  பறக்க விடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாகனங்களில் சுவரொட்டிகளையோ பதாதைகளையோ காட்சிப்படுத்த முடியாது. இந்த விதிமுறைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்துமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விதிமுறைகளை மீறுவோரைக் கைது செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment