//]]>

Thursday, February 8, 2018

ஏழாலை, மயிலங்காட்டில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரம்!(Photo)

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரப் பணிகள் யாவும் நேற்று(07) நள்ளிரவுடன் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி யாழ். வலிகாமத்தின்  ஏழாலை, மயிலங்காடு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் இடம்பெறுவதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். ஏழாலை மூன்றாம் வட்டாரத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபைக்காக போட்டியிடும் தென்னிலங்கையின் பிரதான கட்சியொன்றின் வேட்பாளரின் படங்கள், அவரது பெயர் கட்சியின் சின்னம் என்பன பொறிக்கப்பட்ட பதாதைகைகள் அவரது வீட்டின் முன்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மயிலங்காட்டுப் பகுதியில் தமிழ்க் கட்சியொன்றின் சார்பில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரொருவரின் படம் மற்றும் கட்சியின் சின்னம் என்பன பொறிக்கப்பட்ட பதாதைகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றுப் புதன்கிழமை(08) நள்ளிரவுடன் தேர்தல் பிரசாரப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் யாரேனும் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அல்லது அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனப் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ள நிலையில் அதனை மீறி ஏழாலை, மயிலங்காடு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம்  முன்னெடுக்கப்படுவதாகவும் எமது விசேட செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment