எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளைக் காட்சிப்படுத்துவதற்கு இன்று வியாழக்கிழமை(01) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மேலதிகத் தேர்தல்கள் ஆணையாளர் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளின் போது வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் பாதாதைகளைப் பயன்படுத்த முடியாது. எனினும், கட்சி அலுவலகத்தில் மாத்திரம் 40 சதுர அடி பரப்பிலான பதாதைகையை மாத்திரம் காட்சிப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், தேர்தல் தொடர்பான அனைத்துப் பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும்-07 ஆம் திகதி நள்ளிரவு நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment