//]]>

Thursday, February 1, 2018

யாழில் மகிந்த:பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரிப்பு(Photos)


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இன்று வியாழக்கிழமை(01)  யாழ். மாவட்டத்தின் 13 உள்ளுராட்சி சபைகளிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக யாழ். வருகை தந்துள்ளார்.

இன்று பிற்பகல்-12.30 மணியளவில் யாழ். வருகை தந்த அவர் யாழ். நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ மூன்று வருடங்களுக்குப் பின்னர் யாழ். விஜயம் செய்துள்ளதுடன், அவர் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துக் காணப்பட்டமை நிகழ்வில் கலந்து கொண்ட பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment