மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை(23) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், காலை-08 மணியிலிருந்து மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் மருதநகர், சிதம்பரபுரம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம்,குருக்கள் புதுக்குளம், குருக்களூர், பறனாலயங்குளம் ஒரு பகுதி, ஈரப்பெரிய குளம், வேரகம, கார்குண்டமடு, அளுதகம, அழகல்ல, பகல அழுத்வத்த, புபுதுகம, குருந்துப்பிட்டிய, பூ- ஓயா படைமுகாம், ஈரப்பெரிய குளம் படை முகாம்,ஈரப்பெரிய குளம் SLBC, சாளம்பைக் குளம் பிரதேசம், சாளம்பைக்குளம் புதிய வீட்டுத் திட்டம், பூந்தோட்டம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment