//]]>

Monday, February 19, 2018

சட்டவிரோத சம்பவங்களைத் தட்டிக் கேட்க உங்களுக்கும் உரிமையுள்ளது!(Video)

முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிகளவில் மக்கள் சேவையில் ஈடுபடுவதால் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பினைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள். சமூகத்தில் இடம்பெறும் சட்டவிரோத சம்பவங்களைத் தட்டிக் கேட்க உங்களுக்கும் உரிமையுள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள் எனச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். செல்வகுமார் தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) காலை சுன்னாகம் பொலிஸ் நிலைய வளாகத்தில் சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போது கலந்து கொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். .

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த முச்சக்கர வண்டிகளை அடையாளம் காணும் வகையில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கதொன்று. சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த முச்சக்கர வண்டிகள் பதிவு மேற்கொள்ளாமல் சேவையில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எமது போக்குவரத்துப் பிரிவினருக்குப் போதிய விளக்கத்தை நான் வழங்கியுள்ளேன். மீறி முச்சக்கரவண்டிகள் சேவையில் ஈடுபட்டால் முச்சக்கர வண்டிச் சாரதிகள், பொதுமக்கள் எமக்குத் தெரியப்படுத்த முடியும் என்றார்.

(எஸ்.ரவி-)





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment