யாழ். மாதகல் பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நேற்றுப் புதன்கிழமை(31) பகல் குறித்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது பெற்றோர் ஆகியோர் அதே பகுதியிலுள்ள ஆலயமொன்றுக்குச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய போது குறித்த பெண்மணி மர்மமான முறையில் உயிரிழந்து காணப்பட்டமை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீட்டில் காணப்பட்ட பொருட்கள் தூக்கி வீசப்பட்டும், குறிப்பிட்ட தொகையான பணம் களவாடப்பட்டுள்ள நிலையிலும் மேற்படி வீட்டிற்கு கொள்ளையிடச் சென்றவர்கள் குறித்த பெண்ணை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டப்பகல் வேளையில் இடம்பெற்ற குறித்த சம்பவம் மாதகல் பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்த உதயராஜ் டிலக்சி என்ற 22 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மரண விசாரணைகளின் பின் இன்றைய தினம்(01) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்வபம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(தமிழின் தோழன்)
0 comments:
Post a Comment