//]]>

Thursday, February 1, 2018

செல்வராஜா கஜேந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கை(Photos)

பிரித்தானியரிடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட  உருவாக்கப்பட்ட பின்னர் மூன்று அரசியல் யாப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் நிராகரித்திருந்த நிலையில் தற்போது அதிலும் மோசமான அரசியல் யாப்பினைத் தமிழ்த் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ள முன்வந்திருப்பது இந்தத் தீவிலே தமிழர்களை வாழ்வுரிமை அற்றவர்களாகவே ஆக்கும் எத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் எச்சரித்துள்ளார். 

யாழ். அரியாலையில் அண்மையில் பொதுமக்களைச் சந்தித்த தமிழ்த் தேசியப் பேரவையினர் உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் அரசியல் யாப்பின் இடைக்கால அறிக்கை குறித்த கலந்துரையாடல்களை அம்மக்களுடன் மேற்கொண்டனர்.

இதன் போது  கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இந்தத் தேர்தலுக்குப் பின்னர் இந்த இடைக்கால அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய அரசியல் யாப்பு பாராளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்படவுள்ளது. அதாவது, மூன்றாவது குடியரசு யாப்பாகக் கொண்டுவரப்படவுள்ளது. அதுவொரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பாகக் கொண்டுவரப்படவுள்ளது.

கடந்த கால யாப்புக்களுக்கும் இந்த யாப்புக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது என்றால் இலங்கை சுதந்திரமடைந்த பின் 69 வருடங்களில் மூன்று அரசியல் யாப்புக்கள் நடைமுறையில் இருந்துள்ளன.  1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பும் 1972 ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பும் 1978 ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பும் இருந்துள்ளன. ஆனால், இந்த அரசியல் யாப்புக்கள் எதனையும் தமிழர் தரப்புக்கள் ஆதரித்திருக்கவில்லை. எங்களுக்கு எதிரான அடக்குமுறையின் வெளிப்பாடுகளுக்கு அடிப்படையாகக் காணப்பட்ட இந்த அரசியல் யாப்புக்களை அன்றைய தமிழ்த் தலைவர்கள் நிராகரித்திருந்தனர்.

நாங்கள் ஒரு பக்கத்திலே தேசிய விடுதலை மறுபக்கத்திலே சாதி, மத வேறுபாடற்ற சமத்துவமான ஊழலற்ற நிர்வாகத்தை நாங்கள் கட்டியெழுப்பி இந்த தேசத்தை ஒரு உன்னதமான தேசமாக நாங்கள் மாற்றுவோம். அபிவிருத்தி அடைந்துவருகின்ற மூன்றாம் உலக நாடுகளிலே அரசியல் என்பது ஒரு சாக்கடை அரசியலாக உள்ளது.

நாங்கள் ஒரு வித்தியாசமான புனிதமான, ஒரு நேர்மையான அரசியலைக் கட்டியெழுப்ப விரும்புகின்றோம். எமது ஆயுதப் போாரட்டம் உலக ஆயுதப் போராட்டங்களில் எவ்வாறு உன்னதமான ஆயுதப் போராட்டமாக எமது தேசியத் தலைவரால் கட்டியெழுப்பப்பட்டதோ அதேபோல அரசியலும் ஒரு உன்னதமான அரசியல் போராட்டத்தை நடாத்திக்காட்டுவோம் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment