//]]>

Thursday, March 1, 2018

யாழ்.குடாநாட்டில் நீண்டநாட்களுக்குப் பின் திடீர் மழை(Photos)


யாழ்.குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வியாழக்கிழமை(01) திடீர் மழை பெய்துள்ளது.

அதிகாலை-05.30 மணியளவில் ஆரம்பித்த மழை வீழ்ச்சி சுமார் அரை மணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்துள்ளது.

யாழ்.குடாநாட்டைக் கடந்த பல நாட்களாக கடும் வெப்பம் வாட்டியெடுத்துள்ள நிலையில் வெப்பம் காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கும் இலக்காயிருந்தனர.

இந்நிலையில் திடீர் மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment