சிரியா நாட்டில் இடம்பெற்று வரும் படுகொலைகளைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை(01) கிளிநொச்சியில் கண்டனக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முற்பகல்- 10 மணி முதல் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
“பொது மக்கள் கொல்லப்படுவதை நிறுத்து”, “சிரியாவின் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கு", “ஐ.நாவே உனது கள்ள மௌனத்தைக் களை” உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
0 comments:
Post a Comment