//]]>

Thursday, March 1, 2018

தமிழ்மக்கள் பேரவையில் அனந்தி,ஐங்கரநேசன்,அருந்தவபாலன் இணைவு


வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் இன்றைய தினம்(01) இணைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் விசேட பொதுக்கூட்டம் இன்று வியாழக்கிழமை(01)யாழ்ப்பாணம் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் வடக்குமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் அதிபரும், தமிழரசுக் கட்சியின் தென்மராட்சி அமைப்பாளருமான க.அருந்தவபாலன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது இணைத்தலைவர் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் சபை ஏற்றுக்கொண்டால் வருகை தந்த  மூவரையும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளமுடியும் எனத் தெரிவித்தார். இதனையடுத்துக் குழு உறுப்பினர்களின் சம்மதத்துடன் மூவரும் மத்தியகுழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment