//]]>

Saturday, March 3, 2018

இலங்கையின் முன்னேற்றம் கனடாவுக்கு ஏமாற்றம்!

இலங்கையில் அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்கள் காணப்படுவது குறித்து கனடா ஏமாற்றமடைந்துள்ளது என கனேடிய வெளிவிவகார அமைச்சர் கிறிஸ்டியா பிரிலான்ட் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 26 ஆண்டுகால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது ஒரு முக்கியமான தருணமாகும். ஆனால் அது முதற்படி மாத்திரமே.பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் காயங்கள் ஆற்றப்படாமல் விரக்தியில் உள்ளனர்.  உண்மையான நல்லிணக்கம் அடையப்பட வேண்டும்.

மேலதிக அமைதி, நல்லிணக்கம், அரசியல் உறுதிப்பாடு, மனித உரிமைகள் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலில் மெதுவான முன்னேற்றங்களே காணப்படுவது குறித்துக் கனடா ஏமாற்றமடைந்துள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட போரினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில்  பொறுப்புக்கூறும் பொறிமுறையொன்றை உருவாக்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற கனடாவின் எதிர்பார்ப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வலியுறுத்த விரும்புகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment