மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(03) காலை- 08.30 மணி முதல் மாலை-05.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஏ-9 பிரதான வீதியில் (புங்கங்குளத்திலிருந்து கச்சேரி நல்லூர் வீதிச் சந்தி வரை), பாரதி லேன்,புங்கன்குளம் வீதி புகையிரதக் கடவை வரை, கச்சேரி கிழக்கு ஒழுங்கை, பேரின்பநாயகம் வீதி, காட்டுக்கந்தோர் வீதி, மண்டைதீவு, மண்கும்பான், அல்லைப்பிட்டி, வேலணையின் ஒரு பகுதி, மண்கும்பான் தேசிய நீர் வழங்கல் வடிகால் சபை, மண்கும்பான் கடற்படை முகாம், மண்டைதீவு இலங்கை வெலுசுமண கடற்படை முகாம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment