இலங்கைத் தமிழரசுக் கட்சியிலிருந்து அனந்தி சசிதரனை நீக்குவதென கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட போதும் அந்த முடிவை நடைமுறைப்படுத்துவத்துவது தற்போது வரை பரிசீலனையிலேயே உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும், வடக்கு மாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனை நீக்குவதெனக் தமிழரசுக்கட்சியின் மத்திய குழுவில் அண்மையில் எட்டப்பட்ட முடிவு குறித்து வினாவிய போது விசேடமாகக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அனந்தி சசிதரனின் சில செயற்பாடுகள் காரணமாக கட்சி அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு குறிப்பிட்ட காலப் பகுதி வரை அவருக்கான கால அவகாசத்தையும் வழங்கியது.
பின்னர் அவரது செயற்பாடு காரணமாக மத்திய செயற்குழுவில் கட்சியிலிருந்து நீக்கலாம் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுத் தானிருந்தது எனவும் கூறினார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment