கண்டியில் சிங்கள- முஸ்லீம் இனங்களுக்கிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.
இதனையடுத்து நேற்று தெல்தெனிய பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.இதனையடுத்துச் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர்.எனினும், தெல்தெனியவில் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் மீது நேற்று முன்தினமிரவு தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் சில கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டன. அத்துடன் சில வாகனங்களும் தாக்கப்பட்டன.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில் நேற்றைய தினம்(05) அங்கு பதற்றநிலை அதிகரித்தது. இந்நிலையில் நேற்றைய தினம் கண்டி திகண பகுதியில் இரண்டு இனங்களையும் சேர்ந்த குழுக்களுக்கிடையே மோதல்கள் வெடித்தன. மோதலில் ஈடுபட்டவர்களைக் கலைக்கப் பொலிஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசினர்.
இதேபோன்று, தெல்தெனியவிலும் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு,நீர்த்தாரைப் பிரயோகம் என்பன நடாத்தப்பட்டன. இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அங்கு தொடர்ச்சியான பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment