இலங்கை அரசை ஐக்கியநாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் பொறிமுறையைக் கோரும் கையெழுத்துப் போராட்டம் தற்போது யாழ்.சுன்னாகம் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கான தமிழர் செயற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியியினரால் நடாத்தப்பட்டு வரும் குறித்த கையெழுத்துப் போராட்டத்தில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கையொப்பமிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment