//]]>

Thursday, November 17, 2016

வலி.வடக்கின் தையிட்டி வள்ளுவர்புரத்தை விடுவிக்கக் கோரிக்கை



வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட தையிட்டிக் கிராமத்திற்கு அருகிலுள்ள வள்ளுவர் புரத்தின்  200 ஏக்கர் நிலப் பகுதியும் விடுவிக்கப்பட்டு மல்லாகம் கோணப்புலம் முகாமில் வாழும் அனைத்து மக்களும் சொந்தவிடங்களில் குடியேற்றம் செய்யப்படவேண்டும் என வலியுறுத்தி வலி. வடக்கு மீள்குடியேற்றப் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் இ.குணபாலசிங்கத்தால் இன்று வியாழக்கிழமை(17) யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி மகேஸ் சேனாநாயக்காவிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றைக் கையளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிக் கிராமத்திற்கு மிக அருகிலுள்ள வள்ளுவர்புரம் பகுதி இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதனால், மல்லாகம்கோணப்புலம் முகாமில் வாழும் 300 குடும்பங்களும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.  

எனவே,  மேற்படி கோரிக்கையினைக் கருத்தில் கொண்டு யாழ். மாவட்டக் கட்டளைத்தளபதி மகேஸ் சேனநாயக்கா மேற்படி பகுதியையும் விடுவிக்க முன்வரவேண்டும் என முகாம் மக்களினால் தெல்லிப்பழை  பிரதேச செயலாளரூடாகக்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

குறித்த விடயம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடிப் பதில் வழங்குவதாக யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி உறுதி அளித்தாக வலி.வடக்கு மீள்குடியேற்றச் சங்கத் தலைவர் இ.குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment