//]]>

Thursday, November 17, 2016

யாழ். குடாநாட்டில் இரண்டாவது நாளாகக் கடும் மழை (Photos)


யாழ். குடாநாட்டில் இன்று வியாழக்கிழமை(17) இரண்டாவது நாளாகக் கடும் மழை பெய்துள்ளது. 

இன்று அதிகாலை ஆரம்பித்த கடும் மழை, அவ்வப்போது விட்டு விட்டு பொழிந்துள்ளது. 

இன்றைய நாள் முழுவதும் நீடித்த மழை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் மக்கள் நடமாட்டமும் வழமையை விடக் குறைவாகவே காணப்பட்டது. 

இன்று காலை சில நிமிடங்கள் கடும் காற்றுடன் கடும் மழை பெய்துள்ளதுடன் தற்போது வரை மழையுடனான காலநிலை நீடிக்கிறது. 

கடும் மழை காரணமாக யாழ்.மாவட்டத்தின் முக்கிய வீதிகளான கே.கே.எஸ் வீதி,  பிறவுண்  வீதி, கொக்குவில் பொற்பதி வீதி, யாழ்.நாவலர் வீதி, சுன்னாகம்-புத்தூர் வீதி உட்படப் பல வீதிகளிலும், தாழ்வான பகுதிகளிலும் அதிகளவு வெள்ள நீர் தேங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.  



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment