//]]>

Saturday, December 17, 2016

2020 ஆம் ஆண்டளவில் இந்த நாடு எலும்புத் துண்டு: ஹெகலிய ஆருடம்


ஒருபுறத்தில் பலாலியும், சம்பூர் பகுதியும் இந்தியாவிற்கும், மறுபுறத்தில் திருகோணமலை அமெரிக்காவிற்கும் வழங்கப்படுகிறது. 2020ஆம் ஆண்டளவில் இந்த நாடு எலும்புத்துண்டாகவே மாறிவிடும். ஸ்ரீலங்கா சர்வதேச போர்த் தளமாக  மாறிவிடும் எனத் தெரிவித்தார் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெகலிய ரம்புக்வெல.

ஒன்றிணைந்த எதிர்கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று சனிக்கிழமை(17) கொழும்பில் இடம்பெற்றது.  நாடாளுமன்ற உறுப்பினர்களான டளஸ் அழகப்பெரும மற்றும் கெஹலிய ரம்புக்வெல ஆகியோர் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஹெகலிய ரம்புக்வெல மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முன்னைய ஆட்சியின்போது தேர்தல் காலங்களில் இந்த அரசாங்கத்திற்கு மேலும் 5 ஆண்டுகளைக் கொடுத்தால் சீனாவின் கொலனியாக ஸ்ரீலங்காவை மாற்றிவிடுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். இன்று சீனாவின் கொலனியாக இந்த நாட்டை மாற்றியமைப்பது யார்?

இங்கு சீனாவின் கொலனியாகவும், அங்கு அமெரிக்காவின் கொலனியாகவும், மற்றைய இடத்தில் இந்தியாவின் கொலனியாகவும் மாற்றி இந்த நாட்டை விளையாட்டுத் திடலாக மாற்றி இளைஞர்களை மீண்டும் ஆயுதமேந்தும் நிலைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது.

விசேடமாகப்  புதிய அரசியலமைப்பு தொடர்பில் புதுமையான அவசரம் நிலவிவருகிறது. 9,10,11ஆம் திகதிகளில் அறிக்கைகளைச்  சமர்பித்துப் பேசவிருக்கின்றனர்.

ஏப்ரல் மாதம்- 5 ஆம் திகதி புதிய அரசியலமைப்பை நிறைவு செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து  நிறைவேற்ற எதிர்பார்க்கின்றனர் என்ற தகவல் கிடைத்துள்ளது. இந்தக் கேடுநிறைந்த அரசியலமைப்பிற்கு ஆதரவாகக்  கை உயர்த்த வேண்டாம் என்றார்.

இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியின் அதிகாரங்களை அபகரித்துப்  பயன்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment