//]]>

Saturday, December 17, 2016

நாடு திரும்பினார் ஜனாதிபதி

மலேசியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை(17) பிற்பகல் மீண்டும்  நாடு திரும்பியுள்ளார்.

மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மலேசிய மன்னர் மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார். இதன் போது இரு நாடுகளுக்குமிடையே ஐந்து  ஒப்பந்தங்களும்  கைச்சாத்திடப்பட்டன.

இந் நிலையில் ம லேசியா சென்ற ஜனாதிபதி  தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment