கடந்த பல நாட்களாக சுகவீனமுற்றிருந்த அம்மையார் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் பல நாட்கள் சுயநினைவின்றி கோமா நிலையிலும் இருந்துள்ளார். இந்த நிலையிலேயே சிகிச்சை பலனளிக்காது இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை வியாழக்கிழமை நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
அம்மையார் இளைப்பாறிய ஆசிரியை என்பதுடன் நேற்று முன்தினம் தனது 90 ஆவது வயதில் காலடி எடுத்து வைத்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
அம்மையாரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் ஆத்மா இறையடியில் இன்புற்றிருக்கவும் எல்லாம் வல்ல இறையருளைப் பிரார்த்திக்கின்றோம்.
0 comments:
Post a Comment