//]]>

Wednesday, December 21, 2016

யாழ். சங்கத்தானை கோர விபத்து: பஸ் சாரதிக்கு ஐம்பதாயிரம் ஆட்பிணை

யாழ்.சாவகச்சேரி சங்கத்தானைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை(17) இடம்பெற்ற தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் 11 பேர் உயிரிழக்கக் காரணமான ஹைஏஸ் வான்-பேருந்து கோர விபத்துத் தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துச் சாரதியை ஐம்பதாயிரம் ரூபா ஆட்பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20) அனுமதியளித்துள்ளது. 

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றப் பதில் நீதவான் செ-கணபதிப்பிள்ளை முன்னிலையில் சந்தேகநபர்  ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் போது விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் மூவரின் சாட்சியமும் நீதவான் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. 

மேலும், எதிர்வரும் ஜனவரி- 19 ஆம் திகதி நீதவானால் குறித்த வழக்குத் தவணையிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment